tamilnadu

img

மக்களின் பாதுகாப்புக்கு பாஜக அரசுகளே பொறுப்பு!

லக்னோ:
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய பாஜக அரசுக்கும், உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கும் உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது? என்றமேல்முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. ரஞ்சன் கோகோய் ஓய்வுபெற உள்ளதால் நவம்பர் 17-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையொட்டி, தற்போதே உத்தரப்பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடைஉத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.இந்நிலையில், “நாடு மற்றும் மக்களின் பொதுவான நலனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்க வேண்டும். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் உள்ளது” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். அயோத்தி தீர்ப்பையொட்டி நாடுமுழுவதுமே ஒருவித இறுக்கமான சூழலும், மக்கள் மனதில் சந்தேகமும் காணப்படுகிறது என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

;